கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Jun 2020 10:16 AM IST (Updated: 7 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பீதி

குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரின் உறவினர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த தகவல் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் சுமார் 80 பேருக்கு அவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுடைய சளி மாதிரி எடுக்கப்பட்டது.

பரிசோதனை முகாம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த மே மாதம் 8-ந் தேதி அரசு அதிகாரிகள் பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அரசின் உத்தரவின் படி கூடுதலாக அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் களப்பணியில் ஈடுபட்டவர்கள். எனவே அவர்களுக்கு 2-ம் கட்டமாக கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியாகும். இந்த பரிசோதனை முகாமில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story