வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி: மதத்தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை


வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி: மதத்தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 8 Jun 2020 4:25 AM IST (Updated: 8 Jun 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரி,

புதுவை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனைத்து மத தலைவர்களுடன்  இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கிருஷ்ணன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் பேசுகையில், ‘அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அரசு வழிகாட்டுதல்களின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பக்தர்களை முக கவசம் அணியாமல் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது. சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கோவில்களை திறக்க அனுமதியில்லை’ என்றார்.

Next Story