விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: உளுந்து விலை உயர்வு பருப்பு வகைகள் வரத்து குறைவு
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை உயர்ந்துள்ள நிலையில் பருப்பு வகைகள் வரத்து குறைந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோவுக்கு ரூ.800 விலை உயர்ந்து ரூ.7800 முதல் ரூ.8000 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,300 முதல் ரூ.11,300 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பயிறு 100 கிலோ ரூ.7,300 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், பாசிப்பருப்பு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ ரூ.6 ஆயிரம் ஆகவும், துவரம் பருப்பு ரூ.9 ஆயிரமாகவும் விற்பனைஆனது.
வத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் வத்தல் குவிண்டாலுக்கு ஏ.சி.வத்தல் ரூ.13 ஆயிரத்து 500 ஆகவும், நாடு வத்தல் ரூ.8500 ஆகவும், முண்டு வத்தல் ரூ.11 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது. மல்லி லயன் ரகம் 40 கிலோவுக்கு ரூ.3500 ஆகவும், நாடு ரகம் ரூ.2725 ஆகவும் விற்பனை ஆனது.
நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.4703 ஆகவும், கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2650 ஆகவும், நிலக்கடலைப் பருப்பு 80 கிலோ ரூ.6650 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4500 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1700 ஆகவும் விற்பனையானது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.25 விலை உயர்ந்து ரூ.1275 ஆக விற்பனை ஆனது. மற்ற மளிகை பொருட்களில் விலை மாற்றம் ஏதும் இல்லை.
எதிர்பார்ப்பு
விருதுநகர் மார்க்கெட்டிற்கு பருப்பு வகைகள் வடமாநிலங்களில் இருந்து வர வேண்டி உள்ளது. வடமாநிலங்களில் வெட்டுக்கிளி படை எடுப்பால் பருப்பு வகைகளின் பயிர் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு பருப்பு வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பால் பருப்பு மில்கள் இயங்கவில்லை.
எனவே பருப்பு வரத்து குறைவதோடு, தூத்துக்குடி துறைமுகம் மூலம் பருப்பு வகைகள் வர வேண்டி உள்ளதால் செலவு அதிகம் ஆகும் நிலையில் பருப்பு வகைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story