அழிக்கால் மீனவ கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது


அழிக்கால் மீனவ கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 8 Jun 2020 7:08 AM GMT (Updated: 8 Jun 2020 7:08 AM GMT)

மணவாளக்குறிச்சி அருகே அழிக்கால் மீனவ கிராமத்தில் பாம்பூரி வாய்க்கால் ஓடுகிறது. மழை காலத்தில் இதில் பெருகும் நீர் நிரம்பி கடலில் கலக்கும். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.

ராஜாக்கமங்கலம்,

பாம்பூரி வாய்க்காலில் இதனால்  மழைநீர் அதிக அளவு செல்கிறது. ஆனால் பொழிமுகத்தில் மணல் நிரம்பி உள்ளதால், கடலுக்குள் செல்ல முடியாமல் மழைநீர் அழிக்காலில் வின்சென்ட் நகர், மாதா நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் மீனவ மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பெரும்பாலான மீனவர்கள் மின் மோட்டார் வைத்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர்.

கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் டேவிட்சன் மற்றும் வருவாய்த்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மணல் திட்டை அகற்றி, மழை நீரை கடலுக்கு திருப்பி விட்டனர்.

Next Story