திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்  சேர்க்கை
x
தினத்தந்தி 8 Jun 2020 10:30 PM GMT (Updated: 8 Jun 2020 7:09 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி அனைத்து வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளையும், முதுநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளையும் கொண்டுள்ளது. என்.பி.ஏ., டி.சி.எஸ். அங்கீகாரம், ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்றிழையும் பெற்று இருக்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

பொறியியல் படிப்பில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினித்துறை (சி.எஸ்.இ.), மின் மற்றும் மின்னணுத்துறை (இ.இ.இ.), தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ.) மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை (எம்.டெக்.), ஆற்றல் சார் மின்னணுவியல் மற்றும் டிரைவஸ் அமைப்புசார் பொறியியல், வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு பொறியியல் மற்றும் வணிக நிர்வாகத்துறை (எம்.பி.ஏ.) ஆகிய பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகமும் உள்ளன. இக்கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. கல்லூரியின் கணினி துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்துக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி இருக்கிறது.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் விவரம், அங்கு வேலை செய்வதற்கு உண்டான சூழலை தெரிவிப்பதுடன், தன்னம்பிக்கையை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்வழி கல்வியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலவழி கல்வி பயின்ற மாணவர்களோடு போட்டி போடும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 25-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளன. கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை வசதி, கணினி சேவை கொண்டுள்ளது.

கல்லூரியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட இடங்களுக்கும், கல்லூரிக்கு அருகில் உள்ள இடங்களுக்கும் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இக்கல்லூரி கடந்த 4 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டலம் 18-ன் கீழ் தடகள போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. திறன் தூக்கும் போட்டியில் மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகையும், விவசாய, கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பெற வழிவகை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி, விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.

இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெற www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தின் வாயிலாகவும், drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது முதல்வரை நேரிலோ அல்லது 94432 46150, 04639-220715, 220702, 220700 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

Next Story