மின்துறையை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு ; போராட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்


மின்துறையை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு ; போராட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2020 4:19 AM IST (Updated: 9 Jun 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின்துறையை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


பாகூர்,

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கப்படுவதற்கு அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் காட்டுக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் எதிர்ப்பு போராட்டக்குழுவினரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டக்குழு நிர்வாகிகள் கண்ணன், வேல்முருகன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்கப்படும் முடிவை ரத்து செய்யும்வரை விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்ட குழுவினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story