குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை காட்டேரிக்குப்பம், செட்டிப்பட்டு, பி.எஸ்.பாளைம், சந்தைபுதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை போக்க புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. நேற்று தனது ஆதரவாளர்களுடன் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜெ.ஜெயபால், பொதுச்செயலாளர் பாலன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார். இதை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Related Tags :
Next Story