குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்டியடித்த பொதுமக்கள்
குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
குன்னூர்,
குன்னூரை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவை குடியிருப்புகளுக்குள் புகுவதோடு ரேஷன் கடைகளை உடைத்து உணவு பொருட்களை சூறையாடி வருகின்றன. மேலும் வளர்ப்பு தேனீக்கள் கூண்டுகளுக்குள் புகுந்து, தேனை குடித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கரோலினா, கரிமரா ஆகிய ஊர்களுக்குள் கரடி ஒன்று புகுந்தது. இதை கண்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து கரடியை சத்தம் போட்டு விரட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். மேலும் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் அடிக்கடி கரடி உலா வருவதால், அங்கு தொழிலாளர்களை 2 நாட்களுக்கு பணிக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story