புதிதாக 308 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்வு
கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 308 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5,387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 308 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 277 பேர். இத்துடன் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,695 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். அதாவது, பெங்களூரு நகரை சேர்ந்த 67 வயது முதியவர், 48 வயது பெண், 65 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தவர்களில் கலபுரகியில் 99 பேர், யாதகிரியில் 66 பேர், பீதரில் 48 பேர், உடுப்பியில் 45 பேர், பெங்களூரு நகரில் 18 பேர், பல்லாரியில் 8 பேர், கதக்கில் 6 பேர், சிவமொக்காவில் 4 பேர், தார்வாரில் 4 பேர், ஹாசனில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், கொப்பல், ராமநகரில் தலா ஒருவர் உள்ளனர்.
கர்நாடகத்தில் இதுவரை 3 லட்சத்து 93 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 779 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநிலத்தில் 40 ஆயிரத்து 477 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் கொரோனா நோயாளிகள் மரணம் அடைவதும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெங்களூருவில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. ஆனால் மரண விகிதத்தில் பெங்களூரு முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story