எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 சிறப்பு தேர்வுக்காக சென்னைக்கு சிறப்பு பஸ்சில் சென்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 சிறப்பு தேர்வுக்காக சென்னைக்கு சிறப்பு பஸ்சில் சென்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 9 Jun 2020 6:58 AM IST (Updated: 9 Jun 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர், வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள், கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 சிறப்பு தேர்வு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி,

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 சிறப்பு தேர்வையொட்டி இந்த மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 9 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக சென்னை மையத்திற்கு செல்கிறார்கள். அவர்களை சிறப்பு பஸ் மூலம் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி அவர்கள் தேர்வுகளை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கிருஷ்ணகிரியில் இருந்து புறப்பட்ட பஸ்சில் திருப்பத்தூர், வேலூர், சேலம், தர்மபுரியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story