நாமக்கல் மாவட்டத்தில் 1,073 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 1,073 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த 49 வயது நிரம்பிய லாரி டிரைவர் சிகிச்சை பலன்இன்றி இறந்து விட்டார். 77 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 7 பேர் நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 1,073 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 229 பேர் தற்காலிக முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் 5 நாட்கள் அல்லது 7 நாட்கள் கழித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story