நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் அள்ளிக் கொள்ளலாம் ; அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளிக்கொள்ளலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
நெல்லிக்குப்பம்,
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தென்னம்பாக்கம் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் குளங்கள், நீர் நிலைகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன் பெறலாம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடியே 72 லட்சத்து 23 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகள் எடுத்து பயன் பெறலாம். இதில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமன்றி பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணிகளுக்கு களிமண் தேவைப்படும் குயவர்களும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மண் எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி பயன் பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள குளம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி வரவேற்றார். இதில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், தாசில்தார் செல்வக்குமார், நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட பேரவை பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, முன்னாள் அட்மா குழு தலைவர் சபரி, முன்னாள் கவுன்சிலர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தென்னம்பாக்கம் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் குளங்கள், நீர் நிலைகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன் பெறலாம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடியே 72 லட்சத்து 23 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகள் எடுத்து பயன் பெறலாம். இதில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமன்றி பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணிகளுக்கு களிமண் தேவைப்படும் குயவர்களும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மண் எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி பயன் பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
Related Tags :
Next Story