மணவாடி அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் பரிதாபம்


மணவாடி அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jun 2020 10:43 AM IST (Updated: 9 Jun 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

மணவாடி அருகே மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால், பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர், 

மணவாடி அருகே மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால், பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெயிண்டர்

கரூர், மணவாடி அருகே உள்ள பால்வார்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 46). பெயிண்டரான இவருக்கு, இலக்கியா (32) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரவணகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்படைந்த இலக்கியா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சமீபத்தில், சரவணகுமார் தன் மனைவியிடம் சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், இலக்கியா வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சரவணகுமார் நேற்று முன்தினம் மூலக்காட்டானூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

சாவு

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரவணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி குடும்பம் நடத்த வராததால், பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story