ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: சமூக இடைவெளியை கடைப்பிடித்த வாடிக்கையாளர்கள்


ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: சமூக இடைவெளியை கடைப்பிடித்த வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 9 Jun 2020 11:53 AM IST (Updated: 9 Jun 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்ததை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு சென்றனர்.

பெரம்பலூர், 

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்ததை தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு சென்றனர்.

அமர்ந்து சாப்பிட அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தளர்வு நேற்று முதல் அமலானது. பெரம்பலூரில் உள்ள ஓட்டல்களில் இதுவரை பார்சல் மட்டும் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதிக்க தொடங்கி உள்ளனர். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கிருமி நாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து

ஓட்டலில் அமர்ந்து சாப்பிட இடம் இல்லாதபோது, சிலர் காத்திருந்து சாப்பிட்டு சென்றதை சில ஓட்டல்களில் காணமுடிந்தது. இதேபோல டீக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து டீ குடிக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியுடன் கூடிய டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் சிலர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர்ந்து டீ குடித்தனர். இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகளில் இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கினர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழப்பழுவூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றன.


Next Story