திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jun 2020 9:45 PM GMT (Updated: 9 Jun 2020 8:11 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பூந்தமல்லி நகராட்சி பகுதியில் 22 பேரும், திருவள்ளூர் ஒன்றியத்தில் 17 பேரும், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 13 பேரும், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 9 பேரும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 8 பேரும், பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் 6 பேரும், திருவேற்காடு நகராட்சி, ஊத்துக்கோட்டை பகுதியில் தலா 4 பேரும், சோழவரம் ஒன்றியத்தில் 3 பேரும், எல்லாபுரம் ஒன்றியத்தில் 2 பேரும், கடம்பத்தூர், பூண்டி ஒன்றியத்தில் தலா ஒருவரும் என 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,476 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 771 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேர் இறந்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் 39 வயது ஆண், காரணைப்புதுச்சரி பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சி, கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர், கரன் தெருவை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கூடுவாஞ்சேரி கபாலி நகர் 1வது தெருவை சேர்ந்த 67 வயது மூதாட்டி, மறைமலைநகர் நகராட்சியில் உள்ள கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 31 வயது வாலிபர், மறைமலைநகர் ஐஸ்வரியா நகர் 5வது தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 38 வயது ஆண், 36 வயது பெண், மறைமலைநகர் நகராட்சி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், சபாபதி நகர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,146 ஆனது. இவர்களில் 883 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை கடந்த 4-ந் தேதி 1,537ஆக இருந்தது. அதன்பிறகு நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருவதால் கடந்த 5 நாளில் 609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியில் உள்ள குரு கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், 38 வயது ஆண் மற்றும் எருமையூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 50 வயது ஆண், சோமங்கலம் புதுநல்லூர் 5வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 35 வாலிபர் ஆகிய 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 567 ஆனது. இவர்களில் 342 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் பலியானார்கள். 220 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story