விதிமுறைகளை பின்பற்றாததால் புதுவையில் மருந்துக்கடைக்கு சீல்
விதிமுறைகளை பின்பற்றாததால் புதுவையில் மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது கோவில்கள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதனால் அந்த மருந்து கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அதே பகுதியில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான குறியீடு போடாததால் ஐஸ்கிரீம் விற்கும் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story