சமூக வலைத்தளத்தில் நாராயணசாமி மீது அவதூறு ; அரசு ஊழியர் கைது


சமூக வலைத்தளத்தில் நாராயணசாமி மீது அவதூறு ; அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 4:54 AM IST (Updated: 10 Jun 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரை அடுத்த உளவாய்க்காலை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 55). புதுவை அரசு ஊழியரான இவர் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

புதுச்சேரி,

கடந்த சில நாட்களுக்கு முன் இவர் சமூக வலைத்தளத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் ஆகியோரை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று சைபர் க்ரைம் போலீசார் சந்திரசேகரனை கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story