மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கும் வீட்டில் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பு - சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
மராட்டியத்தில் இருந்து வருபவர்களும் நேரடியாக 14 நாட்கள் வீட்டில் தனிமை கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.
மங்களூரு,
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நேற்று உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொரோனா பரவல் குறித்து கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரியும் கலந்துகொண்டார். இந்த கூட்டம் முடிந்ததும் மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மராட்டிய மாநிலம் தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் அந்த விதிமுறையையும் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி அவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பு கிடையாது. அதாவது மராட்டியத்தில் இருந்து வருபவர்களும் 14 நாட்கள் வீட்டு தனிமையில் கண்காணிக்கப்படுவார்கள்.
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் போலீசார், ஆசா மருத்துவ ஊழியர்கள், ஊர்க்காவல் படையினர் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். உடுப்பியில் இதுவரை 946 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் வீடுகள் சீல் வைக்கப்படும். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தனிமையில் இருப்பவர்கள் வெளியே சுற்றினால் அதுபற்றி, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சுகாதாரத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Related Tags :
Next Story