போத்தனூர்-திண்டுக்கல் இடையே ரெயில் சோதனை ஓட்டம்


போத்தனூர்-திண்டுக்கல் இடையே ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 5:47 AM IST (Updated: 10 Jun 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

போத்தனூர்-திண்டுக்கல் இடையேயான ரெயில் பாதையில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பழனி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில வழித்தடங்களில் ரெயில்களை அதிவேகமாக இயக்கி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று போத்தனூர்-திண்டுக்கல் இடையேயான ரெயில் பாதையில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி போத்தனூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில், பழனி ரெயில் நிலையத்தை 6.10 மணிக்கு கடந்து சென்றது. இரவு 7 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. ஒரு என்ஜின், 3 பெட்டிகளுடன் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட ரெயில், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.

Next Story