குமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு


குமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 12:55 AM GMT (Updated: 10 Jun 2020 12:55 AM GMT)

குமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

குமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

வெறிச்சோடியது

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் வழிபாட்டுத் தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதேபோல் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் வந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

அனுமதி இல்லை

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசின் உத்தரவுப்படி குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் ஒரு இடத்தில் கூட்டமாக கூடுவதற்கு அனுமதி கிடையாது.

கன்னியாகுமரி உள்பட மாவட்டத்தில் உள்ள எந்த சுற்றுலா தலத்துக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே யாரும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம். குமரி மாவட்டத்தில் மினி பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story