சிறுமியிடம் சில்மிஷம்; சலவை தொழிலாளி கைது


சிறுமியிடம் சில்மிஷம்; சலவை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 1:21 AM GMT (Updated: 2020-06-10T06:51:01+05:30)

சிங்காரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள்.

ஊத்தங்கரை,

கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த சலவை தொழிலாளி பிரகாஷ் (வயது 35) என்பவர் அப்போது அங்கு வந்து  அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இது தொடர்பாக சிறுமி சார்பில் அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story