ஆரல்வாய்மொழி- குருசடி இடையே குளமாக மாறிய சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி


ஆரல்வாய்மொழி- குருசடி இடையே குளமாக மாறிய சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 10 Jun 2020 7:07 AM IST (Updated: 10 Jun 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி- குருசடி இடையே சாலை குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி- குருசடி இடையே சாலை குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

குளம் போல் மாறிய சாலை

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குருசடிக்கு (தேவசகாயம் மவுண்ட்) செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதுவும் குறிப்பாக ரெயில்வே பாலம் பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் காணப்படுகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மற்ற இடங்களிலும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பயணிக்கும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி கிழே விழுந்து விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சீரமைக்க வலியுறுத்தல்

சாலை மோசமாக காட்சி அளிப்பதால் குருசடியில் இருந்து ஆரல்வாய்மொழிக்கும், ஆரல்வாய்மொழியில் இருந்து குருசடிக்கும் செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதற்கிடையே ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Next Story