மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 10 Jun 2020 7:57 AM IST (Updated: 10 Jun 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி, 

மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

வரகனேரி-தென்னூர்

திருச்சி வரகனேரி துணைமின் நிலையத்தில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தாராநல்லூர், அலங்கநாதபுரம், பூக்கொல்லை, பைபாஸ் ரோடு, வரகனேரி, மல்லிகைபுரம், துரைசாமிபுரம், சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. 

இதேபோல தென்னூர் துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தில்லைநகர் பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தென்னூர் ஹைரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்ஷெட் ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சந்துக்கடை, கம்மாளத்தெரு, மரக்கடை, பாஸ்போர்ட் ஆபிஸ் பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

பூவாளூர்

மேலும் திருச்சி மாவட்டம், பூவாளூர் துணை மின் நிலையம், தொட்டியம், தா.பேட்டை, அதவத்தூர், கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, மேலகொத்தம்பட்டி மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களிலும் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை முதல் காலை 8 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது என அந்தந்த மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story