விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி   கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 9:07 AM IST (Updated: 10 Jun 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு  கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். கொரோனா நிவாரண நிதியாக ரேஷன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.12,500 வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக மாற்ற வேண்டும். பேரூராட்சிகளுக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு தொழில்களுக்கு நிபந்தனையில்லாமல் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு தாலுகா பொறுப்பு செயலாளர் கோவிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, நகர செயலாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேத்தூர்

அதேபோல சேத்தூரில் நேற்று கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமை தாங்கினார். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

இதேபோல் முத்துசாமிபுரத்தில் வீராசாமி தலைமையிலும், தேவதானத்தில் கணேசமூர்த்தி தலைமையிலும், செட்டியார்பட்டியில் அய்யனன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் 10 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சக்கனன், நகர செயலாளர் காதர்மொய்தீன், முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், தேனி வசந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்குண்டான்பட்டி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா, துணை செயலாளர் வைரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முருகேசன், தாயில்பட்டி கண்ணன் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 14 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 9 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவா, ஜோதிலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story