மடப்புரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12 லட்சத்து 71 ஆயிரம்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12 லட்சத்து 71 ஆயிரம் இருந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றதாகும். புகழ்பெற்ற இக்கோவிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணி கணக்கிடப்பட்டது. இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் சிவகங்கை ஆய்வாளர் சுந்தரேசுவரி முன்னிலையில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரொக்கம் ரூ.12,71,104, தங்கம் 142 கிராம், வெள்ளி 187 கிராம் இருந்தது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story