பெரியசெவலை ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்


பெரியசெவலை ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 Jun 2020 10:08 AM IST (Updated: 10 Jun 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று கலெக்டர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

அரசூர்,

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை எடை குறைவாக விற்பனையாளர் வழங்கி வந்தது அப்போது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர் சத்தியநாராயணன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளருக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாலையில் சத்தியநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Next Story