திருப்பூரில் கொரோனா வார்டில் மேலும் 3 பேர் அனுமதி கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு


திருப்பூரில் கொரோனா வார்டில் மேலும் 3 பேர் அனுமதி கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Jun 2020 5:41 AM GMT (Updated: 2020-06-10T11:11:46+05:30)

திருப்பூரில் கொரோனா வார்டில் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தனியாக கொரோனா வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் கொரோனா சந்தேகம் இருக்கிறவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வார்டில் நேற்று மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆக உயர்வு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் கள் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று சந்தேகம் இருக்கிறவர்களுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த வார்டில் நேற்று மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வார்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். தொற்று உறுதி செய்யப்படுகிறவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். தற்போது 16 ஆண்கள் 3 பெண்கள் என 19 பேர் கொரோனா வார்டில் உள்ளனர்.

Next Story