கொரோனா காரணமாக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிவைப்பு


கொரோனா காரணமாக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 11:51 PM GMT (Updated: 10 Jun 2020 11:51 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி நடந்து வருகிறது. இந்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநிலத்தை புரட்டி எடுத்து வரும் கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறைந்தபாடாக இல்லை.

தள்ளிவைப்பு

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 22-ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி ஆகஸ்டு 3-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும், மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் 4 அல்லது 5 நாட்கள் வரையே நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Next Story