அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மும்பையில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மும்பையில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என முதல்-மந்திரி வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மும்பையில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என முதல்-மந்திரி வலியுறுத்தி உள்ளார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நடந்த சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை கூட்டம்
மராட்டிய சட்டசபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் தற்போது வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டும். வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நமக்கு உள்ளது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடக்கூடாது.
மின்சார ரெயில் சேவை
மக்களின் உடல் நலனுக்காக தான் வெளிப்புற உடற்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்–ளது. உடல் நலனை கெடுத்து கொள்வதற்காக அல்ல. பொதுமக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்ற வேண்டும். அல்லது ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். ஆனால் அவர்களின் நலனுக்காக கூறப்படுவதால் மக்கள் அரசின் உத்தரவுகளை மதிப்பார்கள் என நம்புகிறேன்.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும். சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பலர் பயணம் செய்ய முடியாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உடன் இருந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியதாவது:-
நிசர்கா புயல் பாதிப்பு நிவாரணம்
நிசர்கா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பயிர் நாசம் அடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story