சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 11 Jun 2020 12:38 AM GMT (Updated: 2020-06-11T06:08:56+05:30)

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக 12-ந்தேதி (நாளை) காலை 9 மணி பிற்பகல் 2 மணிவரை கீழ்க்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்வினியோகம் கொடுக்கப்படும். அந்த இடங்கள் வருமாறு:-

எழும்பூர்: ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச்சந்து, சர்ச் ரோடு, பாலர் கல்வி நிலையம், சி.எம்.டி.ஏ. மெரினா டவர், வேனல்ஸ்சாலை, பி.சி.ஓ.சாலை, புரசைநெடுஞ்சாலை ஒருபகுதி, வி.பி.ஹால், பிக்னிக் ஓட்டல், வால்டாக்ஸ் பகுதி மற்றும் பூங்கா நகர் பகுதி, வரதராஜன் தெரு, சந்தோஷ்நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒருபகுதி, கெங்குரெட்டி சாலை, ஆராமுதம் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, கற்பூரமுதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு.

அதேபோல், புழல், தாம்பரம் பல்லாவரம் கிழக்கு, தாம்பரம் நேருநகர், தாம்பரம் பல்லாவரம் மேற்கு, தாம்பரம் கீழ்க்கட்டளை, சிடல்பாக்கம், ரெட்டேரி ஆகிய பகுதிகளின் சில இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story