பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கை தாக்கல்
பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. இறுதிகட்ட அறிக்கையை விரைவில் அளிக்க உள்ளது.
சென்னை
கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த கல்வியாண்டில் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்பட்டுள்ள ஆசிரியர்மாணவர்களின் இடைவெளி, கற்றல், கற்பித்தல் குறைபாடுகள், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது?, பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடத்திட்டங்களை குறைக்கலாமா? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? என்பது உள்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கல்வித்துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதில் 16 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழு இதுவரை 2 முறை நேரடியாகவும், 2 முறை காணொலி காட்சி மூலமும் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறது. மேலும், பள்ளிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையிலும் ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில், 16 பேர் கொண்ட இந்தக்குழு ஆராய்ந்து அதன் மூலம் எடுக்கப்பட்ட சில கருத்துகளை உள்ளடக்கிய முதற்கட்ட அறிக்கையை கல்வித்துறையிடம் தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையை பார்த்து, மேலும் கூடுதல் தகவலை குழுவினரிடம், கல்வித்துறை கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையிலும், மத்திய அரசு வெளியிட இருக்கும் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களை பொறுத்தும் இறுதிகட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Related Tags :
Next Story