தர்மபுரி மாவட்டத்தில் டிரைவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த 42 வயது கார் டிரைவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பினார்.
தர்மபுரி,
பென்னாகரம் பகுதியை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சரக்கு லாரியில் சென்றார். இவர் அங்கிருந்து கடந்த 8-ந்தேதி தர்மபுரி திரும்பினார். இந்த 2 பேருக்கும் சுகாதாரத்துறையினர் சளி மற்றும் ரத்த மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். மேலும் இவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் முடிவில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தர்மபுரியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி தர்மபுரி வந்தார். இவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மேற்கண்ட 3 பேரும் நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 19 பேர் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story