போலி ஆவணம் தயாரித்து ரூ.3¼ லட்சம் நிலம் மோசடி; 3 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நிலஅபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலாயுதம், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் ரூ.3¼ லட்சம் மதிப்பிலான 72 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அதில் போலியான ரேகை வைத்து, புகைப்படம் ஒட்டியும் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜி மகன் செங்குட்டுவன் (வயது 25). இவர் சம்பவத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தனது அத்தை சகுந்தலா- அண்ணாமலை தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
அண்ணாமலையின் தந்தை பெயரில் காராமணிக்குப்பம் கிராமத்தில் 72 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம்(76), பில்லாலியை சேர்ந்த சீனிவாசன்(63), சிவக்குமார்(47) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து அதில் அண்ணாமலையின் கையெழுத்தை அவர்களே போட்டு, வேலாயுதத்தின் புகைப்படத்தை ஒட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டு, தனி நபர் ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நிலஅபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலாயுதம், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் ரூ.3¼ லட்சம் மதிப்பிலான 72 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அதில் போலியான ரேகை வைத்து, புகைப்படம் ஒட்டியும் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story