கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்
கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் டிரைவர்களுக்கு சன் அரிமா சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கிரண் தலைமை தாங்கினார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் செந்தில்குமார், அருண், செயலாளர் ஆமிஅப்பாஸ், பொருளாளர் ஜெரால்டு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை துணை ஆளுநர் டி.பி.ரவீந்திரன், கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தாசில்தார் அரவிந்த், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை வழங்கினர். அதில் ஏரிச்சாலையையொட்டி சன் கார்னர் பஸ் நிறுத்தப் பகுதியில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 60 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. முடிவில் 12-வது வார்டு முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சன் அரிமா சங்க முன்னாள் தலைவருமான ஆஷா ரவீந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story