மொத்தம் 363 பேர் பாதிப்பு: மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து 254 பேர் குணமடைந்தனர்


மொத்தம் 363 பேர் பாதிப்பு:  மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து 254 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 12 Jun 2020 5:47 AM IST (Updated: 12 Jun 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 254 பேர் குணமடைந்துள்ளனர்.

மதுரை, 

மதுரையை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோல் ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மதுரையில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 363 ஆக மாறி இருக்கிறது.

12 பேர் குணமடைந்தனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 242 பேர் முற்றிலும் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் நேற்று ஒரே நாளில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 12 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் மதுரை கருங்காலக்குடி, மேலூர், கீழபனங்காடி, செல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 7 வயது சிறுவனும் ஒருவன். இதுபோல், 6 பெண்கள் 5 ஆண்கள் அடங்குவர்.

இவர்களுக்கு கொரோனா நோய் தொற்று முற்றிலும் குணமடைந்ததை தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் இவர்கள் 15 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

Next Story