நங்கூரம் பழுதாகி நின்ற இழுவைக்கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென் கடல் பகுதியில் நின்ற இழுவைக்கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
ராமேசுவரம்,
குஜராத்தில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல இழுவைக்கப்பல் ஒன்று புறப்பட்டு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென் கடல் பகுதியான குருசடை தீவு அருகே நங்கூரமிட்டு அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி அந்த கப்பல் செல்ல பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. திடீரென இந்த இழுவைக்கப்பலின் நங்கூரம் பழுதானால் கப்பலை இயக்க முடியவில்லை. பின்னர் பழுதான நங்கூரம் சரிசெய்யப்பட்டு இழுவைக்கப்பல் தயார் நிலையில் இருந்தது.
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணிக்கு தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அப்போது தென் கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அந்த இழுவைக் கப்பல் துறைமுக அதிகாரிகளின் அனுமதி, வழிகாட்டுதலுடன் தூக்குப்பாலத்தை கடந்து காக்கிநாடா நோக்கி சென்றது.
மேலும் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல 30 விசை படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்று மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த படகுகள் அனைத்தும் ஊரடங்கு மற்றும் தடைக்காலம் முடிந்து 84 நாட்களுக்கு பிறகு நாளை (சனிக்கிழமை) முதல் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல இருக்கின்றன.
Related Tags :
Next Story