குடியாத்தத்தில், மூதாட்டிக்கு உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பண மோசடி - வாலிபர் கைது


குடியாத்தத்தில், மூதாட்டிக்கு உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பண மோசடி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2020 3:45 AM IST (Updated: 12 Jun 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து, அவரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடு பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம், 

குடியாத்தம் கள்ளூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வர் சந்திரசேகர். இவரு டைய மனைவி ஞானாமிர்தம் (வயது 70), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று மதியம் 12 மணியளவில் குடியாத்தம் கொண்ட சமுத் திரம் பகுதியில் உள்ள அரசு வங்கி ஏ.டி.எம். மையத்துக்குப் பணம் எடுக்கச் சென்றார். அங்கு, அடையாளம் தெரியாத மர்மநபர் மூதாட்டிக்கு உதவி செய்வதுபோல் பேசி நடித்துள்ளார்.

மர்மநபர், மூதாட்டியிடம் இருந்து ஏ.டி.எம்.கார்டை வாங்கி எந்திரத்தில் 2 முறை சொருகினார். அப்போது பணம் வரவில்லை என்றும், ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை என்றும் மர்மநபர் கூறி, மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் மூதாட்டியின் செல்போனுக்கு ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாகக் குறுஞ்செய்தி வந்தது. அவர், மர்மநபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அந்த ஏ.டி.எம். கார்டு வேறு ஏ.டி.எம். கார்டாக இருந்தது தெரிய வந்தது. உடனே ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்மநபர் தப்பிச்செல்ல முயன்றார்.

மர்மநபரை பார்த்த மூதாட்டி கூச்சலிடவே வங்கி காவலாளிகள் மற்றும் வங்கிக்கு வந்த பொதுமக்கள் பலர் திரண்டு மர்மநபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். குடியாத்தம் டவுன் போலீ சாரை வரவழைத்து, அவர்க ளிடம் மர்மநபரை ஒப்ப டைத் தனர். இன்ஸ்பெக்டர் சீனி வாசன், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் மர்மநபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அவர், கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு ஏரிகோடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) எனத் தெரிய வந்தது. அவர், மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து அவரின் ஏ.டி.எம். கார்டை பெற்று, அதற்கு பதிலாக பயனற்ற ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்த தாகவும், அவரின் அசல் ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட தாகவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டிக்கு சொந்தமான ஏ.டி.எம். கார்டை பறிமுதல் செய்தனர்.

Next Story