நீரோடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: திருப்பத்தூர் கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு


நீரோடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: திருப்பத்தூர் கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு
x
தினத்தந்தி 11 Jun 2020 9:45 PM GMT (Updated: 12 Jun 2020 4:59 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் சிவன்அருளிடம் புகார் மனு ஒன்றை வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

மூக்கனூர் ஊராட்சியில் உள்ள குரும்பன்குட்டை ஏரியில் இருந்து அடியத்தூர் கிராமத்தின் வழியாக மேல்அச்சமங்கலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் இருந்து மூக்கனூர் மற்றும் அடியத்தூர் ஊராட்சி மேல்அச்சமங்கலம் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே நீரோடையில் இருந்து எத்த கோட்டைக்குச் செல்லும்பொது நீரோடை உள்ளது. இந்த நீரோடையின் மூலம் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஓடையின் அருகிலேயே 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மேல்அச்சமங்கலம் அடியத்தூர் மக்கள் சுமார் 300 குடும்பங்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஒருவர் தனது பண்ணை வீட்டுக்கு செல்ல மேற்கண்ட நீரோடைகளை ஆக்கிரமித்து தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்களை பரப்பி உள்ளார். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாய நிலமும் பாதிக்கப்படும். எனவே பொது நீரோடைகளை ஆக்கிரமிப்பு செய்யும் தனியார் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை கொடுத்த அவர்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றனர்.

Next Story