ஸ்ரீமதுரை ஊராட்சியில் நிலத்தடி நீரை பாதுகாக்க 16 குட்டைகள் அமைக்கும் பணி
கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நிலத்தடி நீரை பாதுகாக்க 16 குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் விவசாய நிலங்களில் குட்டைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குட்டைகள் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்களும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து, குட்டைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கலிக்குன்னு, குண்டூர், கொரவயல், ஒடக்கொல்லி, மானிமூலா, கோழிகண்டி உள்பட 16 இடங்களில் குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story