கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் முன்னாள் மந்திரி தன்வீர் சேட் வலியுறுத்தல்


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் முன்னாள் மந்திரி தன்வீர் சேட் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jun 2020 4:57 AM IST (Updated: 13 Jun 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் மந்திரி தன்வீர் சேட் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி தன்வீர்சேட் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதாக கர்நாடக அரசு தேதியை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி, அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கர்நாடக அரசும், அந்த தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக சில மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் அந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதுவது என்பது கடினம்.

மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் இருக்கிறது. இதை மாநில அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு தன்வீர்சேட் தெரிவித்துள்ளார்.

Next Story