மாவட்ட செய்திகள்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து கிளனர் சாவு - டிரைவர் படுகாயம் + "||" + At the Toppur Pass Larry sinks kilanar death - The driver was injured

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து கிளனர் சாவு - டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து கிளனர் சாவு - டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து இடிபாடுகளில் சிக்கி கிளனர் பலியானார். இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
நல்லம்பள்ளி,

குஜராத் மாநிலத்தில் இருந்து கண்ணாடி பாரம் ஏற்றி கொண்டு ஒரு சரக்கு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். கிளனராக விக்னேஷ் (23) என்பவர் உடன் வந்தார். இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவர் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிளனர் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். டிரைவர் கோவிந்தனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் ரோந்து படையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் பலி
பெரியபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் கணவர் கண் முன் பரிதாபமாக பலியானார்.
2. சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
3. பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. திண்டிவனம் அருகே பயங்கர விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல்: இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலி
திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
5. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதி 2 பேர் பலி
பிவண்டி மான்கோலி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...