திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா சமயபுரத்தில் தந்தை-மகனுக்கு தொற்று?
மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சமயபுரத்தில் தந்தை-மகனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திருச்சி விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர், சென்னை புழல் சிறையில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் நேற்று குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 37 பேர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் அரியலூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 42 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.
தந்தை-மகனுக்கு தொற்று?
இந்தநிலையில் சென்னையில் இருந்து கடந்த 10-ந் தேதி இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சமயபுரம் சன்னதி வீதியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களை பரிசோதனை செய்ததில், 39 வயதுள்ள ஆண் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் கடைவீதி, கோவிலின் சுற்று பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story