கரூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்


கரூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jun 2020 11:05 PM IST (Updated: 13 Jun 2020 11:05 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வெள்ளியணை,

கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகன் (வயது 15). அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வைத்தீஸ்வரன் வீட்டில் இருந்தார். இந்தநிலையில், நேற்று மதியம் வைத்தீஸ்வரன் அப்பகுதியிலுள்ள கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.

பின்னர் கிணற்றில் இறங்கி நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்த வைத்தீஸ்வரன், திடீரென கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்றார். ஆனால், அங்கிருந்து மீண்டு வரமுடியாமல் உள்ளே மூழ்கி விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கிணற்றிலிருந்து மேலே வந்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசாரும், கரூர் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, வைத்தீஸ்வரனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story