கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2020 2:24 AM IST (Updated: 14 Jun 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு.

கரூர்,

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று உள்ள நபர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அரசு சிறப்பு கவனம் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மாதத்தின் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் விடுமுறை அளித்து அந்த நாட்களில் அரசு அலுவலகங்களில் விரிவான துப்புரவு மற்றும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி உடனிருந்தார். 

Next Story