புதுவையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி - சாவு எண்ணிக்கை 4 ஆனது
புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 4 ஆனது. நேற்று ஒரேநாளில் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் உள்பட 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேட்டுப் பாளையத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 5 பேர், தவளக்குப்பத்தை சேர்ந்த 3 பேர், வீமன் நகரைச் சேர்ந்த 2 பேர், தட்டாஞ் சாவடி, வி.வி.பி. நகர், சின்ன கொசப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 12 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
தற்போது கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 49 பேர், ஜிப்மரில் 36 பேர், காரைக்காலில் ஒருவர், மாகியில் 3 பேர், சென்னை, டெல்லியில் தலா ஒருவர் என புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 91 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 9,658 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 9,352 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 132 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
புதுச்சேரி பீமன் நகரை சேர்ந்த 56 வயதுடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் தகுந்த பாதுகாப்புடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தகனம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே அரும்பார்த்த புரம் (தற்காலிக முகவரி கொடுத்த நபர்), முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பீமன் நகரைச் சேர்ந்தவர் பலியாகி இருப்பதன் மூலம் கொரோனா சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த 10 தினங்களாக தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 3 அல்லது 4 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது வேகமாக பரவி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இம்மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
சோலை நகர், நெய்தல் வீதி, கவுண்டம்பாளையம், வடமங்கலம், அன்னை தெரசா நகர், மூகாம்பிகை நகரில் 9-வது குறுக்கு தெரு உள்ளிட்ட 6 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சன்டே மார்க்கெட் நடைபெறும் காந்தி வீதியில் மக்கள் அதிகமாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தி வருகிறோம். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story