மராட்டியத்தில் புதிதாக 3,427 பேருக்கு தொற்று: இந்தியா முழுவதும் மேலும் 11,458 பேருக்கு கொரோனா - பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
இந்தியா முழுவதும் நேற்று புதிதாக 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இதில் மராட்டியத்தை சேர்ந்த 3,427 பேரும் அடங்குவர்.
மும்பை,
சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நாடு முழுவதும்...
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு சென்றுள்ளது. கடந்த மாதம் முழுவதும் தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4 இலக்க எண்களில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலானா 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இதில் 1,54,329 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 386 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,884 அதிகரித்துள்ளது.
113 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இது நாடு முழுவதும் ஏற்பட்ட நோய் பாதிப்பில் 3-ல் ஒரு பங்கு ஆகும்.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 427 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 568 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல மாநிலத்தில் மேலும் 113 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் 3 ஆயிரத்து 830 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 49 ஆயிரத்து 346 பேர் குணமாகி உள்ளனர். 51 ஆயிரத்து 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை நிலவரம்
மும்பையில் நேற்று புதிதாக 1,830 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 831 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல நகரில் புதிதாக 69 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 47 பேர் ஆண்கள். 22 பேர் பெண்கள். இதுவரை மும்பையில் 2 ஆயிரத்து 113 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல புனேயில் நேற்று 2 மாத ஆண் குழந்தை வைரஸ் நோய்க்கு உயிரிழந்தது.
தமிழகம்
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் இருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் 36,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 13,398 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 1,214 ஆக உள்ளது.
குஜராத்தில் 1,415 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மேற்குவங்காளத்தில் 476 பேரும், மத்தியபிரதேசத்தில் 440 பேரும், உத்தரபிரதேசத்தில் 365 பேரும், ராஜஸ்தானில் 272 பேரும், தெலுங்கானாவில் 174 பேரும், ஆந்திராவில் 80 பேரும், கர்நாடகாவில் 79 பேரும், அரியானாவில் 70 பேரும், பஞ்சாபில் 63 பேரும், ஜம்மு காஷ்மீரில் 53 பேரும், பீகாரில் 36 பேரும், உத்தரகாண்டில் 21 பேரும், கேரளாவில் 19 பேரும், ஒடிசாவில் 10 பேரும், அசாம் மற்றும் ஜார்கண்டில் தலா 8 பேரும், சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 6 பேரும், சண்டிகாரில் 5 பேரும், புதுச்சேரியில் 2 பேரும், திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மக்களுக்கு ஆறுதல் தரும் விஷயம்
கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில், மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து குணமடைந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை வருமாறு:-
குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள்-22,527 (குணமடைந்தவர்கள்-15,493), உத்தரபிரதேசம் 12,616 (7,609), ராஜஸ்தான் 12,068 (8,898), மத்தியபிரதேசம் 10,443 (7,201), மேற்குவங்காளம் 10,244 (4,206), கர்நாடகா 6,516 (3,440), அரியானா 6,334 (2,475), பீகார் 6,103 (3,587), ஆந்திரா 5,680 (3,105), ஜம்மு காஷ்மீர் 4,730 (2,086), தெலுங்கானா 4,484 (2,278), அசாம் 3,498 (1,537), ஒடிசா 3,498 (2,474), பஞ்சாப் 2,986 (2,282), கேரளா 2,322 (1,000), உத்தரகாண்ட் 1,724 (947), ஜார்கண்ட் 1,617 (672), சத்தீஸ்கார் 1,429 (550), திரிபுரா 961 (278), இமாசலபிரதேசம் 486 (297), கோவா 463 (69), மணிப்பூர் 385 (77), சண்டிகார் 334 (286), லடாக் 239 (62), புதுச்சேரி 157 (67), நாகாலாந்து 156 (49), மிசோரம் 104 (1), அருணாசலபிரதேசம் 67 (4), சிக்கிம் 63 (2), மேகாலயா 44 (22), அந்தமான் நிகோபர் தீவு 38 (33), தாதர்நகர் ஹவேலி 30 (2).
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Tags :
Next Story