நசரத்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
நசரத்பேட்டை அருகே சாலையில் கிடந்த அட்டை பறந்து வந்து முகத்தில் விழுந்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த 2 பேர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நடுவீரப்பட்டு அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 22). அதே பகுதி காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் இவரது நண்பர் சிவா (20). இவர்கள் இருவரும் வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தனர்.
நேற்று நண்பர்கள் இருவரும் நசரத்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே செல்லும்போது காற்று வீசியதில் சாலையில் கிடந்த காகித அட்டை பறந்து வந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா முகத்தில் விழுந்தது.
இதில் கண்கள் மறைக்கப்பட்டதால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி, இவர்கள் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய லோகேஷ், சிவா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் நரசிம்மன்(49) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story