உடல் நலம் பாதிக்கப்பட்டு உக்ரைன் நாட்டில் தவிக்கும் தேனி மருத்துவ மாணவர் - மீட்டு வர பெற்றோர் கோரிக்கை
உடல் நலம் பாதிக்கப்பட்டு, உக்ரைன் நாட்டில் தவிக்கும் தேனி மருத்துவ மாணவரை மீட்டு வர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் சசிக்குமார். இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அங்கு 3-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான வயிற்று வலி காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேற்கொண்டு சிகிச்சை பெற வசதியின்றியும், சொந்த ஊருக்கு திரும்ப வர முடியாமலும் தவித்து வருகிறார்.
இதனால், அவருடைய பெற்றோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், உக்ரைன் நாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கொரோனா அச்சுறுத்தலால் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவிக்கும் தங்களின் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அந்த மனுவுடன் சசிக்குமாரின் சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றுகளையும் இணைத்து இருந்தனர்.

Related Tags :
Next Story