வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
சிவகங்கை,
தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் வைரஸ் தொற்று இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் முதல் சுற்றில் 12 பேர் மட்டும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர், சுவாச பொடி, மூலிகை டீ ஆகியவைகள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருந்தது. இந்நிலையில் மராட்டியம், கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தொற்று பரவலும் மாவட்டத்தில் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பிற்காக சென்னை சென்று குடும்பத்துடன் தங்கியவர்கள், படிப்பிற்காக சென்றவர்கள் தற்போது சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு பயந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தற்போது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 10 முதல் அதிகரித்து வருவதால் தற்போது பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று தங்கியினால் சமூக பரவல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story