நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 15 Jun 2020 3:15 AM IST (Updated: 15 Jun 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 10 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் உழவர் சந்தை சுமார் 2½ மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த கடைகள் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு நேற்று 7 டன் காய்கறிகள் மற்றும் 3 டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 175-க்கு விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கடைகளில் தக்காளி கிலோ ரூ.18-க்கும், கத்தரி கிலோ ரூ.24-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.28-க்கும், கேரட் கிலோ ரூ.36-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.28-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.40-க்கும், இஞ்சி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.35-க்கும், பெரிய வெங்காயம் ரூ.22-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து இருப்பதால் அதன் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story